விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் 50 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.
மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க | தெலங்கானா அருகே பேருந்தில் பயங்கர தீ: 26 பயணிகள் தப்பியது எப்படி?
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மத்திய இணையமைச்சரவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 130க்கும் மேற்பட்ட இடங்களுக்கு செல்லும் 50 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.