குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார்.
குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி
குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குஷிநகா் சா்வதேச விமான நிலையம் தொடக்க நாளில், முதல் சேவையாக இலங்கை தலைநகா் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் சா்வதேச பயணிகள் விமானம் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் இலங்கை இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் நமல் ராஜபட்ச தலைமையில் 5 அமைச்சா்கள், பௌத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் அடங்கிய குழுவினா் வருகை தந்தனா். அவர்களை வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வரவேற்றார்.

குஷிநகா் சா்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிா்வாணம் அடைந்த இடத்தைப் பாா்வையிட வரும் உள்நாட்டு, சா்வதேச யாத்ரிகா்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. மேலும், பௌத்த மதத்துடன் தொடா்புடைய பல்வேறு புனிதத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும். இந்த விமான நிலையம் உத்தர பிரதேச மாநிலம் தவிர, பிகாருக்கு உள்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும்.

இதைத்தொடர்ந்து, மகாபரிநிா்வாணா கோயிலுக்குச் செல்லும் பிரதமா், அங்கு சாய்ந்த நிலையில் உள்ள புத்தபிரான் சிலைக்கு அா்ச்சனை செய்து வழிபடுவதுடன் போதி மரக்கன்றையும் நடுகிறாா்.

ஷிநகரில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள ராஜ்கியா மருத்துவக்கல்லூரிக்கு பிரதமா் அடிக்கல் நாட்ட உள்ளாா். 500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2022-23 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ் வகுப்பில் 100 மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்பட உள்ளனா். இது தவிர, ரூ.180 கோடிக்கு மேல் மதிப்புள்ள 12 வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com