ஷாருக் கான் மகனுக்கு பிணை வழங்க மறுப்பு

ஆா்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க அவா்களைக் கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சொகுசு கப்பலில் போதை பொருள் சிக்கிய விவகாரத்தில், ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு பிணை வழங்க மும்பையில் உள்ள போதை தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மும்பையை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் இம்மாதம் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், 8ஆம் தேதி முதல் மும்பை சிறையில் சிறைவாசம் அனுபவித்துவருகிறார்.

அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட அா்பாஸ் மொ்சன்ட், மூன்மூன் தமேச்சா, நூபுா் சட்டோச்சா, மோகக் ஜெய்ஸ்வால் ஆகியோரும் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆா்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க அவா்களைக் கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது 2 பெண்கள் உட்பட 10 பேர் மொத்தம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்திருந்தனர். 

ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது அவரிடம் எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும் கூட அவர் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதாகவும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் போதைபொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, பிணை கேட்டு ஆர்யன் கான் தரப்பு, உயர் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com