மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

ஏழை மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

ஏழை மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் அரசியல் அரங்கில் பரபரப்பு கூடியுள்ளது.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பாஜக மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கடந்த காலங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த பணங்களை ’பொய்யில் பூத்த மலர்’ ஒன்று மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்று மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசு மக்களின் அடிப்படை வசதிகளைப் பறிப்பதிலும், அவர்களின் சட்டைப் பைகளில் உள்ள சேமிப்புகளைக் கொள்ளையடிப்பதையுமே முன்னுரிமை காட்டி செயல்பட்டு வருகிறது” என அகிலேஷ் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com