'கோவா முதல்வராக விரும்பவில்லை; ஆனால், பாஜகவை வர விடமாட்டேன்' - மம்தா பானர்ஜி

கோவா முதல்வராக விரும்பவில்லை, ஆனால் பாஜகவை வரவிடமாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். 
'கோவா முதல்வராக விரும்பவில்லை; ஆனால், பாஜகவை வர விடமாட்டேன்' - மம்தா பானர்ஜி

கோவா முதல்வராக விரும்பவில்லை, ஆனால் பாஜகவை வரவிடமாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். 

கோவாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்கு பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

2022 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மூன்று நாள்கள் பயணமாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று கோவா சென்றுள்ளார். 

காலை 10 மணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து உரையாடிய அவர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

பனாஜியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, 'நான் ஒன்றும் வெளி ஆள் இல்லை. நான் ஒரு இந்தியன். எங்கு வேண்டுமானாலும் செல்லாம். மேற்குவங்கம் என்னுடைய தாய்நாடு என்பதுபோலவே கோவாவும். கோவாவுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது.

நான் கோவாவில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராக வேண்டும் என்று இங்கு வரவில்லை. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக(தாதா)வை வர விட மாட்டேன். 

நான் கோவாவுக்கு வரும்போது என்னுடைய போஸ்டர்கள் பல கிழிக்கப்பட்டிருந்தன. பாஜகவினர் மனரீதியாக அசுத்தமானவர்கள். அவர்கள் எங்கு கறுப்புக் கொடிகளை காட்டினர். நானோ அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தேன்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com