கோவாவில் மம்தா பானர்ஜி: தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை

2022 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கோவா சென்றுள்ளார். 
கோவாவில் மம்தா பானர்ஜி: தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை

2022 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கோவா சென்றுள்ளார். 

கோவாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்கு பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று கோவா சென்றுள்ளார். 

கோவாவில் கட்சித் தொண்டர்கள் மற்றும் மீனவர் சமூகத்தினருடன் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 10 மணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுடன் உரையாடிய அவர், தேர்தல் பணிகள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. 

பின்னர் மதியம் 12 மணிக்கு பெட்டிம் பகுதி மீனவர் சமூகத்தினருடன் உரையாடுகிறார். இதையடுத்து 1 மணிக்கு கோவாவில் உள்ள சர்வதேச மையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு போண்டா, பிரியோல் பகுதியில் உள்ள மங்குஷி கோயிலுக்கும் மாலை 4 மணிக்கு மார்டோலில் உள்ள ஸ்ரீ மஹால்சா நாராயணி கோயிலுக்கும் 4.30 மணிக்கு குண்டாய்ம் பகுதியில் உள்ள உள்ள தபோபூமி கோயிலுக்கும் செல்கிறார்.

மாலை 5. 45 மணிக்கு கோவாவின் சர்வதேச மையத்தில் சிவில் சொசைட்டி உறுப்பினர்களுடன் உரையாடுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com