
பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
தமிழ்நாட்டின் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகியாகவும் கூடுதல் பொறுப்புகள் வழங்கி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா்.
இதையடுத்து பஞ்சாப் ஆளுநா் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.