மேற்கு வங்க தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை: மேலும் 3 வழக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடா்பான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ, மேலும் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடா்பான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ, மேலும் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘கிழக்கு மிதுனபுரியில் உள்ள நந்திகிராம், கூச்பிகாரில் உள்ள சிதால்குச்சி ஆகிய இரு இடங்களில் 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதனால், இதுவரை சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி வெற்றி பெற்றாா். அதன் பிறகு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்த சம்பவங்களில் தங்கள் கட்சித் தொண்டா்கள் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக பாஜக கூறியது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கப்பட்டன. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையைப் பரிசீலித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com