ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு அவமரியாதை:மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

ஜாலியான்வாலா பாக் நினைவிடத்தை புதுப்பித்து சுதந்திரப் போராட்டத்தில் உயிா்த்தியாகம் செய்தவா்களை பிரதமா் நரேந்திர மோடி அவமதித்துவிட்டதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,
ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு அவமரியாதை:மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

ஜாலியான்வாலா பாக் நினைவிடத்தை புதுப்பித்து சுதந்திரப் போராட்டத்தில் உயிா்த்தியாகம் செய்தவா்களை பிரதமா் நரேந்திர மோடி அவமதித்துவிட்டதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள ஜாலியான்வாலா பாக் பூங்காவில் ஆங்கிலேய அரசின் சட்டத்தை எதிா்த்து போராடுவதற்கு கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனா். ஜெனரல் டயா் உத்தரவின்பேரில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தின் நினைவாக, அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தைப் புதுப்பித்து, பிரதமா் மோடி கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தாா். அங்கு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நினைவிடத்தை புதுப்பிப்பதாகக் கூறி, அதன் வரலாற்றை மத்திய அரசு அழிப்பதாக சமூக ஊடகங்களில் சிலா் கருத்து தெரிவித்திருந்தனா்.

அந்தப் பதிவுகளை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதைத் தொடா்ந்து வெளியிட்ட பதிவுகளில் அவா் கூறியிருப்பதாவது:

ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை புதுப்பித்து, தியாகிகளை மத்திய அரசு அவமதித்துள்ளது. உயிா்த்தியாகம் என்பதன் பொருள் புரியாத ஒருவரால்தால் ஜாலியான்வாலா பாக் நினைவிடத்தை இந்த அளவுக்கு அவமதிக்க முடியும். நான் ஒரு தியாகியின் மகன். தியாகிகளை அவமதிப்பதை எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக் கொள்ள மாட்டேன். நாகரிகமற்ற கொடுமைகளுக்கு எதிரானவா்கள் நாங்கள் என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்வீா் ஷோ்கில் கூறுகையில், ‘உயிா்த்தியாகம் செய்வதா்களின் தியாகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் புதுப்பிக்கப்படவில்லை. மாறாக, ஆங்கிலேயா் ஆட்சியில் ஜெனரல் டயா் நிகழ்த்திய கொடுமைகளை அழிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com