’சார்’, ’மேடம்’ என அழைக்க வேண்டாம்’: புதிய முயற்சியில் கேரள பஞ்சாயத்து அதிகாரிகள்

அரசு அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்கும் விதமாக கேரளத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து கிராம அதிகாரிகள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்கும் விதமாக கேரளத்தைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுவாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும் இடையே இடைவெளி எப்போதும் இருக்கும். அரசின் திட்டங்களைப் பெறுவதற்காக மக்கள் அதிகாரிகளை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளியைப் போக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது கேரளத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்து கிராமம். 

கேரளத்தில் உள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்தில் மக்கள் அரசு அதிகாரிகளை 'சார்' மற்றும் 'மேடம்' போன்ற சொற்களால் அழைக்க வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

காலனித்துவ சொற்களான இவைகள் அதிகாரிகளை பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவற்றிற்கு பதிலாக அதிகாரிகளின் பெயர்கள் அல்லது ’சேட்டன்’, ’சேச்சி’ போன்ற சொற்களால் அழைக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய சொற்களைப் பயன்படுத்தாததற்காக ஏதேனும் சேவை மறுக்கப்பட்டால், அவர்கள் நேரடியாக பஞ்சாயத்து தலைவர் அல்லது செயலாளரிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஒரு தனித்துவமான சீர்திருத்த மாதிரியை அமைத்து, இது போன்ற வணக்கங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த நாட்டின் முதல் பஞ்சாயத்து அமைப்பாக மாத்தூர் மாறியுள்ளது.

சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு இந்த நடவடிக்கை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ’சார்’ எனும் சொல் நான் உங்கள் அடிமை என்பதன் சுருக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com