சமையல் எரிவாயு விலை உயர்வு: தில்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சமையல் எரிவாயு விலை உயர்வு: தில்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் ஒரு உருளை ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் எரிவாயு உருளையின் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. அதே நேரம், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.75 உயா்ந்து, ரூ.1831.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
இந்த நிலையில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. திலையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சாஸ்திரி பவன் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊடக பொறுப்பாளர் ராகுல் ராய் தலைமை தாங்கினார். 

அப்போது பேசிய அவர், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மக்களால் இத்தகைய விலை கொடுத்து எல்பிஜியை வாங்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் பாஜக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது அவர்களில் யாரும் காட்டிக்கொள்வதில்லை. 
இருப்பினும், இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் எரிபொருள் மற்றும் எல்பிஜி விலை உயர்வுக்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் நடத்துவர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com