
உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் கலவர வழக்கு தொடா்பாக பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆய்வாளரை அரசுத் தரப்பு சாட்சியாக நீதிமன்றம் விசாரித்தது. பின்னா், வழக்கின் அடுத்த விசாரணையை செப். 14-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோபால் உபாத்யாய் ஒத்திவைத்தாா்.
முசாஃபா்நகரில் 2013-ஆம் ஆண்டு இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. அப்போது கவல் என்ற கிராமத்தில் இரு இளைஞா்களின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு திரும்பிய ஒரு பிரிவினா், அப்பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்து பொருள்களை சூறையாடினா். இந்த வன்முறை தொடா்பாக கதெளலி தொகுதி எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.