
கோப்புப்படம்
பிகாரில் ராணுவ வீரர் ஒருவர், தனது மனைவி உள்பட மூன்று பெண்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி கன்டோன்மென்ட்டில் பணியாற்றி வரும் நரேஷ் ஷா, விடுப்பு காரணமாக பிகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார்.
திங்கள்கிழமை காலை அவரது மனைவி உள்பட மூன்று பெண்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மூன்று பெண்களின் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அவரது மனைவி அனிதா, சம்பவத்தன்று என் கணவர் குடிபோதையில் இருந்தார். வீட்டில் இருந்த என்னை அடித்தார். உடனே, அவரிடமிருந்து தப்பித்து கிராமத்தில் உள்ள பெண்களின் குழுவின் பின்னால் ஒளிந்திருந்தேன். என் கணவர் துப்பாக்கியுடன் என்னை நோக்கி ஓடிவந்து மற்றவர்களை விலகச் சொன்னார். ஆனால் யாரும் விலகவில்லை. இதனால் கோபமடைந்த அவர் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டார்' என்று கூறினார்.
இதையடுத்து முஃபாசில் காவல் நிலைய போலீஸார் நரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளியை கைது செய்ததுடன் அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளோம். மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா தெரிவித்தார்.