கொல்கத்தாவில் பாஜக எம்பி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு

மேற்குவங்கம் ஜகதடலில் உள்ள பாஜக எம்பி வீட்டில் வெடுகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள பாஜக எம்பி அர்ஜுன் சிங்கின் வீட்டருகே இன்று காலை மூன்று வெடுகுண்டுகள் வீசப்பட்டது. நல்வாய்ப்பாக இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜகதடலில் அமைந்துள்ள அர்ஜுன் சிங்கின் வீட்டுக்கு பைக்கில் சென்ற மூவர் குண்டு வீச்சில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. காலை 6:30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வீச்சு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், வீட்டின் முன்புள்ள வாயலில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், குண்டு வீச்சு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தில்லிக்கு சென்றுள்ள அர்ஜுன் சிங், குண்டு வீச்சு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று மாலையே, அவர் கொல்கத்தாவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவம் என மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் விமரிசித்துள்ளார். மேலும், இதுகுறித்து முதலமைச்சர் மம்தாவிடம் கவலை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், இது உட்கட்சி பூசலால் நிகழ்ந்தது என பரஸ்பர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

திரிணாமுல் எம்எல்ஏவாக இருந்த அர்ஜுன் சிங், கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தேடுக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com