பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும், கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும், கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பேசியது:

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 68 சதவீத பாதிப்பு கேரளத்தில் பதிவானது. நாம் இரண்டாம் அலையில் இருப்பதை இது உறுதி செய்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 20 லட்சம் பேருக்கு போடப்பட்ட நிலையில் செப்டம்பரில் 78 லட்சம் பேருக்கு போடப்படுகிறது. இது இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசியது:

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 58 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 100 சதவீதம் பேரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வேறு நாடுகளிலும் இது பின்பற்றப்படவில்லை. அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கவில்லை. இருப்பினும், பள்ளி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

சில நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் உலக சுகாதார மையம் பரிந்துரைக்கவில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவியல்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com