உ.பி.யில் 30க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு: வீடு, வீடாக விழிப்புணர்வு பிரசாரம்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் 30க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வீடுவீடாக பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் 30க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வீடுவீடாக பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இதுவரை 33 பேர் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் சிகிச்சை பெற்று மீண்ட நிலையில் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், வீடு வீடாக சென்று டெங்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் கூறியதாவது:

மாவட்டத்தில் சமீபத்தில் 18 பேர் டெங்கு பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து மக்களிடம் வீடு வீடாக சென்று பரிசோதிக்கப்படுகிறது. 

அறிகுறிகள் இருக்கும் நபர்கள் உடனடியாக பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், வயிற்றுவலி, குறைந்த ரத்த அழுத்தம், லேசான தலைவலி ஆகியவை இருக்கும்பட்சத்தில் மக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 16 வரை இந்த பிரசாரம் நடைபெறும். இந்த வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், தாங்களாகவே டெங்கு மருந்துகளைத் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com