இந்தியப் பொருளாதாரம் வலிமையாக மீண்டுள்ளது: பிரதமர் மோடி

கரோனா பெருந்தொற்று பாதிப்பின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையாகவே மீண்டு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா பெருந்தொற்று பாதிப்பின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையாகவே மீண்டு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆமதாபாத்தில் வேலைவாய்ப்பு பயிற்சியளிக்கும் வளாகத்தைத் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியது:

"இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தையும் கரோனா பாதித்தது. ஆனால், நமது பொருளாதாரம் பெருந்தொற்றில் தேக்கமடைந்ததைக் காட்டிலும் மிகவும் வலிமையாக மீண்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் உலகின் பெரிய பொருளாதார நாடுகளே தங்களைத் தற்காத்துக்கொண்டிருந்த நேரத்தில் நாம் இங்கு சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தோம்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைபட்டபோது, வாய்ப்புகளை இந்தியாவுக்குச் சாதகமாக்க நாம் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்தத் திட்டம் தற்போது ஜவுளித் துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் துறையும், சூரத் போன்ற நகரங்களும் இந்தத் திட்டத்தின் மூலம் அதிகம் பயனடையலாம். 

இந்தியாவில் வாய்ப்புகளுக்குப் பற்றாக்குறையே இல்லை" என்றார் பிரதமர் மோடி.

தேசிய புள்ளியியல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் -ஜூன் காலாண்டில் 20.1 சதவிகிதத்தை எட்டியுள்ளது. 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4 சதவிகிதம் சுருங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com