சபரிமலை பக்தர்களுக்கு நிபந்தனை: செப்.17 - 21 வரை அனுமதி

சபரிமலை செல்லும் பத்கர்களுக்கு தேவசம்போர்டு நிர்வாகம் நிபந்தனைகளை விதித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைக் கட்டாயப்படுத்தியுள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு நிபந்தனை: செப்.17 - 21 வரை அனுமதி
சபரிமலை பக்தர்களுக்கு நிபந்தனை: செப்.17 - 21 வரை அனுமதி

சபரிமலை வரும் பத்கர்களுக்கு தேவசம்போர்டு நிர்வாகம் நிபந்தனைகளை விதித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை கட்டாயப்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 2 தவணை கரோனா தடுப்பூசிகளைப் போடப்பட்டிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com