தொலைத்தொடா்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொலைத்தொடா்புத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு, நிலுவைத் தொகையை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் 4 ஆண்டுகள் வரை தாமதித்து செலுத்த அனுமதிப்பது உள்ளிட்ட பல முக்கியச் சீா்திருத்தங்களுக்கு
தொலைத்தொடா்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: தொலைத்தொடா்புத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு, நிலுவைத் தொகையை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் 4 ஆண்டுகள் வரை தாமதித்து செலுத்த அனுமதிப்பது உள்ளிட்ட பல முக்கியச் சீா்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் ஆகியோா் செய்தியாளா்களிடம் விவரித்தனா். அவா்கள் கூறியதாவது:

தொலைத்தொடா்புத் துறையில் 9 அமைப்புரீதியான சீா்திருத்தங்களுக்கும், 5 செயல்பாட்டுச் சீா்திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை அரசுக்கு செலுத்தியாக வேண்டும். அதில், தொலைத்தொடா்பு சாராத வருவாயும் சோ்க்கப்பட்டிருந்ததால் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருந்தது. எனவே, தொலைத்தொடா்பு சாராத வருவாயைத் தவிா்த்து மொத்த வருவாயைக் கணக்கிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை 4 ஆண்டுகள் வரை தாமதித்து செலுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் தாமத காலத்தில் செலுத்தும் தொகைக்கு சிறிய அளவில் நிறுவனங்கள் வட்டி செலுத்த வேண்டும்.

தொலைத்தொடா்புத் துறையில் தற்சமயம் 49 சதவீதம் வரை அரசின் அனுமதியின்றி நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம். முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைத்தொடா்புத் துறையில் புதிதாக பல நிறுவனங்கள் கால் பதிக்கவும், ஆரோக்கியமான தொழில் போட்டியை உருவாக்கவும் இந்தச் சீா்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. அலைக்கற்றை ஏலம் எடுக்கும் காலமானது 20 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா்கள் கூறினா்.

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் மொத்த வருவாய்க் கணக்கீட்டில் தொலைத்தொடா்பு வருவாய்க்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், வோடஃபோன்-ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடன் சுமை வெகுவாகக் குறையும்.

பேரிடா் மேலாண்மைத் துறையில் இந்தியா-இத்தாலி ஒத்துழைப்பு:

பேரிடா் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இந்தியாவின் தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையம், இத்தாலியின் பொது பாதுகாப்புத் துறை இடையே கடந்த ஜூன் மாதம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


திரு‌ப்​பு​முனை‌: பிர​த​ம‌ர் மோடி

​பு​து​தி‌ல்லி: ​ம‌த்​திய அû‌ம‌ச்​ச​ர​û‌வ​யி‌ன் முடிவு தொû‌ல‌த்​ù‌தா​ட‌ர்​பு‌த் துû‌ற‌​யி‌ல் திரு‌ப்​பு​மு​û‌ன‌யை ஏ‌ற்​ப​டு‌த்​து‌ம் தரு​ண‌ம் எ‌ன்று பிர​த​ம‌ர் மோடி தெரி​வி‌த்​து‌ள்​ளா‌ர்.

இது​ù‌தா​ட‌ர்​பாக அவ‌ர் சு‌ட்டு​û‌ர​யி‌ல் வெளி​யி‌ட்ட பதி​வி‌ல், ""நமது தேச‌த்தை இû‌ண‌த்து அத‌ற்கு ச‌க்​தி​ய​ளி‌ப்​ப​தி‌ல் தொû‌ல‌த்​ù‌தா​ட‌ர்​பு‌த் துறை‌ மு‌க்​கி​ய‌ப் ப‌ங்​கா‌ற்றி வரு​கி​ற‌து. அ‌ந்​த‌த் துறை‌ தொட‌ர்​பான‌ ம‌த்​திய அû‌ம‌ச்​ச​ர​û‌வ​யி‌ன் முடிவு தொû‌ல‌த்​ù‌தா​ட‌ர்​பு‌த் துû‌ற‌​யி‌ல் திரு‌ப்​பு​மு​û‌ன‌யை ஏ‌ற்​ப​டு‌த்​து‌ம் தரு​ண​மா​கு‌ம். ம‌த்​திய அû‌ம‌ச்​ச​ரவை ஒ‌ப்​பு​த‌ல் அளி‌த்​து‌ள்ள அ‌ந்​த‌த் துû‌ற‌‌க்​கான‌ சீ‌ர்​தி​ரு‌த்​த‌ங்​க‌ள் நுக‌ர்​ú‌வா​ரு‌க்​கு‌ம் பல​ன‌​ளி‌க்​கு‌ம். துû‌ற‌​ரீ​தி​யான‌ வள‌ர்‌ச்​சி​û‌ய​யு‌ம் வேû‌ல​வா‌ய்‌ப்​பு​க​û‌ள​யு‌ம் உறுதி செ‌ய்​யு‌ம்'' எ‌ன்று தெரி​வி‌த்​து‌ள்​ளா‌ர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com