ஆறு மாதத்திற்குள் கட்டுக்குள் வரும் கரோனா: என்சிடிசி தலைவர்

கரோனா எண்டெமிக் நிலையை அடையும் என்றால், பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும் என தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா எண்டெமிக் நோயாக மாறும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், இதே கருத்தை தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உருமாற்றம் அடைந்த புதிய கரோனாவால் மட்டும் முன்றாம் அலையை உருவாக்கிட முடியாது. 

இந்த பெருந்தொற்று நம்முடைய பெரும்பாலான கணிப்புகளை பொய்யாக்கியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள், கரோனா எண்டெமிக் நிலையை அடையும். மக்கள் மத்தியில் பரவல் தொடர்ந்து இருக்க போகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஆனால், சாதாரண காய்ச்சலை போன்று இதனை கையாண்டுவிட முடியும்.

கரோனா எண்டெமிக் நிலையை அடையும் என்றால், பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். சுகாதார கட்டமைப்புக்கு கரோனாவை கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும். கரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக தடுப்பூசி திகழ்கிறது.

75 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்திறன் 70 சதவீதமாக இருந்தால், இந்தியாவில் சுமார் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. ஒரு டோஸ் 30-31% நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஒரு டோஸ் பெற்ற 30 கோடி மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com