
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரேத்தில் புதிதாக 3,320 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,34,557ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று மேலும் 61 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,38,725ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 39,191 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 4,050 பேர் மீண்டனர்.
இதையும் படிக்க- பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை 8 கி.மீட்டர் விரட்டிப் பிடித்த காவல்துறையினர்
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,53,079ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 5,76,46,515 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.