இந்திய பிரதமர்களும் விமான பயணங்களும்

வெளிநாட்டு பயணத்தின்போது, விமானத்திலேயே பிரதமர் அலுவல் பணியை மேற்கொள்வது இது முதல்முறை அல்ல.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் இருந்த பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் ஏர் இந்தியா ஒன் விமானத்திலேயே தான் அலுவல் பணிகளை மேற்கொள்வது போன்ற புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருக்கும் மோடி, புகைப்படங்களை பகிர்ந்தவுடனேயே அது வைரலானது.

வெளிநாட்டு பயணத்தின்போது, விமானத்திலேயே பிரதமர் அலுவல் பணியை மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பிருந்த பிரதமர்களும் விமான பயணத்தின்போது தங்களின் அலுவல் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், விமான பயணத்தின்போது ஆவணங்களை சரி பார்த்திருக்கிறார். இந்த புகைப்படத்தில், அவருக்கு முன்பு பல ஆவணங்கள் இருப்பதை காணலாம். 

ராஜீவ் காந்தி, பிரதமராக பொறுப்பு வகித்தபோது, விமான பயணத்தில் மடிக்கணினியில் தனது பணியை மேற்கொண்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், விமான பயணத்தின் போது அலுவல் பணிகளை மேற்கொண்டு ஆவணங்களை சரி பார்த்திருக்கிறார். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவும், தனது பெரும்பாலான பயணங்களை அலுவல் பணிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com