
கோவேக்ஸின் தடுப்பூசிக்கான உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசி குறித்த கூடுதல் ஆவணங்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார நிறுவனம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.