தேர்தல் வியூகம்: பஞ்சாப் செல்கிறார் கேஜரிவால்

பஞ்சாபில் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி இரு நாள்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 
தேர்தல் வியூகம்: பஞ்சாப் செல்கிறார் கேஜரிவால்


தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இரு நாள்கள் பயணமாக செப்டம்பர் 29-ம் தேதி பஞ்சாப் செல்லவுள்ளார். 

பஞ்சாபில் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி இரு நாள்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 

பஞ்சாபின் லூதியானா பகுதியில் பயணத்தைத் தொடங்கும் அவர், வணிகர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து பேசுகிறார். 

மேலும் செப்டம்பர் 30-ம் தேதி செய்தியாளர்களைச் சந்திக்கிறார். கேஜரிவாலின் பயணத் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சியும் அறிக்கை வாயிலாக உறுதிசெய்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்றது. இதனால் பஞ்சாப் எதிர்கட்சியாகவும் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. 

பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 

இதற்கு முன்பு ஒன்பதரை ஆண்டுகளாக முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். 

இதனைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் வியூகங்களை அமைத்து வருகிறது. தில்லியை மாதிரியாக வைத்து இலவச மின்சாரம் போன்ற தேர்தல் நலத் திட்டங்களை பஞ்சாபிலும் அறிவித்து வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com