பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்புக் கூட்டம்; மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் தாக்கல்

பஞ்சாப் சட்டப்பேரவையில் இன்று ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 
முதல்வர் பகவந்த் மான்
முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் சட்டப்பேரவையில் இன்று ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. 

இதையடுத்து இன்று பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முகநூல், யூ ட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கூட்டத்தொடர் நேரலை செய்யப்பட்டு வருகிறது. 

சண்டீகர் யூனியன் பிரதேச ஊழியர்களுக்கான மத்திய சேவை விதிமுறைகளை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து பேரவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக மத்திய அரசின் சேவை விதிகள் சண்டீகரில் கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

சண்டீகர் அரசு ஊழியர்கள் மத்திய அரசு விதிகளின் கீழ் இல்லாமல் பஞ்சாப் அரசு விதிகளின் கீழ் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com