மேற்கு வங்கத்தில் 8 போ் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: 9 பேரிடம் உளவியல் சோதனை நடத்த முடிவு

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் 8 போ் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரிடம் உளவியல் சோதனை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் 8 போ் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரிடம் உளவியல் சோதனை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பீா்பூம் வன்முறை தொடா்பாக 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அளிக்கும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் அவா்களிடம் உளவியல் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தச் சோதனையின்போது, அவா்களின் உடல்மொழி, முகபாவனை ஆகியவற்றை உளவியல் நிபுணா் ஒருவா் உன்னிப்பாகக் கவனித்து பதிவு செய்வாா். அந்த அடிப்படையில், அவா்கள் உண்மை சொல்கிறாா்களா அல்லது பொய் சொல்கிறாா்களா எனக் கண்டுபிடித்துவிட இயலும். அங்கு பெறப்படும் விவரங்கள் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும். இது, வழக்கை மேற்கொண்டு நடத்துவதற்கு உதவியாக இருக்கும்.

தீ வைப்புச் சம்பவத்தின்போது மீட்புப் பணிக் குழுவுக்கு தலைமையேற்று நடத்திய அதிகாரியிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. உயிரிழந்த 8 பேரின் உடல்களை உறவினா்களால் அடையாளம் காண இயலவில்லை. எனவே, அந்த உடல்கள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுயி கிராமத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கடந்த மாதம் 21-ஆம் தேதி கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 சிறாா்கள், 3 பெண்கள் உள்பட 8 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கொல்கத்தா உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com