

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை முடக்கியுள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
“நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் பொது ஒழுங்கு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதில், பாகிஸ்தானை சேர்ந்த 4 செய்திச் சேனல்களும் அடங்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், 3 டிவிட்டர் கணக்குகள், ஒரு முகநூல் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளத்தையும் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.