குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் கேட்ட கிழவிக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 2017 முதல் 2022 மார்ச் 30 வரை 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகதத் தெரிவித்தார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, மாநில அரசு அளித்த தகவலின்படி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி தப்பியோடியதாகக் கூறினார்.
மேலும், 'இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல்-II (மாநிலப் பட்டியல்) இன் கீழ் காவல்துறை மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறையில் உள்ளவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அந்த வழக்குகளை பதிவு செய்வது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொறுப்பு' என்றும் தெரிவித்தார்.
தேசிய குற்றப் பதிவுப் பணியகத்திடம் உள்ள தரவுகளின்படி (2020 ஆம் ஆண்டு வரை), 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.