தில்லி: மின் சைக்கிள் வாங்கினால் ரூ.5,500 மானியம்

எலக்ட்ரிக் சைக்கிள் வாங்கினால் ரூ.5,500 மானியம் வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.
தில்லி: மின் சைக்கிள் வாங்கினால் ரூ.5,500 மானியம்

எலக்ட்ரிக் சைக்கிள் வாங்கினால் ரூ.5,500 மானியம் வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

தில்லியில் எரிபொருள் வாகனங்களின் பயன்பாடு காரணமாக  வெளியாகும் புகையால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால், எரிபொருளின் தேவையைக் குறைக்கும் முயற்சியாக மின்சார சைக்கிள்களை வாங்கும் முதல் 10,000 பேருக்கு மானியமாக ரூ.5,500 வழங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. அதிலும், முதலில் வாங்கும் 1,000 பேருக்கு கூடுதலாக ரூ.2,000 தரப்படும் என்றும் அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கலோத் தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தகப் பயன்பாட்டிற்கான கனரக இ-சைக்கிள்கள் மற்றும் மின்சார வண்டிகளை வாங்கும்  முதல் 5,000  பேருக்கு ரூ.15,000 வரை அரசு மானியம் வழங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com