நாட்டின் வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி

நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி


நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2024க்குள் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வீடுகள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நோக்கத்துடன் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தில் மாநிலங்களின் வேண்டுகோளின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்ட நிலை மாறி, இத்திட்டத்துக்கென ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் மாநிலங்களுக்கு சராசரியாக நிதி ஒதுக்காமல், திட்டத்தை விரைவாகவும், அதிகளவிலும் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஒதுக்கப்படும் மொத்த நிதியில் மத்திய அரசு 60 சதவிகிதமும் மாநில அரசு 40 சசவிகிதமும் ஏற்கின்றன. 

மழை நீர் சேகரிப்பு, மரக்கன்றுகளை நடவு செய்தல், ஏரிகள், குளங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை நீக்குதல், தூர் வாருதல் என ஒவ்வொரு நிலையிலும்  நீரை சேமிக்கவும், பாதுகாக்கவும் உதவும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் தானாக முன்வந்து இந்த வாழ்வாதாரம் காக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது தான் ஜல்ஜீவன் இயக்கத்தின் நோக்கம். 

இந்நிலையில், நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குடிநீா் சென்றடைந்துள்ள விதம், பொதுமக்களின் விருப்பங்களுக்கும்,  பங்களிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com