கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் தலா ரூ. 225 ஆகக் குறைக்கப்படுவதாக சீரம் இன்ஸ்ட்டிடியூட் (எஸ்ஐஐ) மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்துள்ளன.
கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு


கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் தலா ரூ. 225 ஆகக் குறைக்கப்படுவதாக சீரம் இன்ஸ்ட்டிடியூட் (எஸ்ஐஐ) மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்துள்ளன.

எஸ்ஐஐ தலைமைச் செயலர் அலுவலர் அதார் பூனாவாலா ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது:

"மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பிறகு தனியார் மருத்துவமனைகளுக்கான ஒரு தவணை கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை ரூ. 600-இல் இருந்து ரூ. 225 ஆகக் குறைக்க எஸ்ஐஐ முடிவு செய்துள்ளது."

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணை மேலாண்மை இயக்குநருமான சுசித்ரா எல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பிறகு, ஒரு கோவேக்சின் தடுப்பூசியின் விலையை ரூ. 1,200-இல் இருந்து ரூ. 225 ஆகக் குறைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்."

மத்திய அரசுக்கு இதுவரை பெரும்பாலான தடுப்பூசிகளை விநியோகித்தது எஸ்ஐஐ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களைக் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com