
முதல்வர் பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் மேலும் 3 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
கோவா முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் கடந்த மார்ச் 29-ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், புதிய அமைச்சர்களாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கோமந்தக் கட்சியின் சுதின் தவாலிகர், பாஜகவைச் சேர்ந்த சுபாஷ் பால்தேசாய் மற்றும் நீலகாந்த் ஹலர்ங்கர் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் பி.எஸ்.ஸ்ரீதன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து, சாவந்தின் அமைச்சரவையில் முதல்வர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.