இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து பிரதமர் பதவிக்கு பாகிஸ்தான் புதிய பதவிக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் மூலம் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, கடந்த 50 ஆண்டுகளில் பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்ட முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் இம்ரான் கான்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியுற்றதால், அந்நாட்டின் பிரதமராக ஒருவரை எதிர்கட்சி தேர்வு செய்யலாம். அதன் மூலம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை எதிர்கட்சியால் ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடியும், அந்த தேதிக்குள் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் (70) புதிய பிரதமருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) இணைத் தலைவருமான ஆசிஃப் அலி சர்தாரி, கடந்த மாதம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு ஷெபாஸின் பெயரை முன்மொழிந்தார். இவரின் ஆதரவாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களான கவாஜா ஆசிப் மற்றும் ராணா தன்வீர் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.
இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் 65 வயதான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை புதிய பிரதமர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | இம்ரான் கானை கிளீன் பவுல்டாக்கிய மூன்று பேர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் மோதும் காங்கிரஸ் - அதிமுக

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை

போதைப்பொருள் கடத்தல்: தில்லியில் கைதான பெண்ணை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


