
மேற்கு தில்லியில் திங்கள்கிழமை பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 3 பேர் காயமடைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில்,
மதியம் 1.25 மணியளவில் சிலிண்டர் வெடிப்பு குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஜிதேந்தர் (40), ராகுல் (28), அனிதா (32) ஆகிய 3 பேர் ஏற்கனவே தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மதியம் 1.40 மணியளவில் நிலைமை கட்டுக்குள் வந்தது. மேலும் 3.10 மணியளவில் தீயணைப்பு வாகனங்கள் திரும்பின. சிறிய காயங்களுடன் காயமடைந்த மூவரின் நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.