போயிங் விமானங்களை இயக்க 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குத் தடை
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க, 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குத் தடை விதித்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்துள்ளது.


புது தில்லி: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க, 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குத் தடை விதித்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்துள்ளது.
முறையான பயிற்சி பெறாதவர்கள் என்று கூறி, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இவர்கள் மேக்ஸ் ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது என்று டிஜிசிஏ தலைவர் அருண் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மீண்டும் முறையான பயிற்சி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க பயிற்சி பெற்ற 650 விமானிகள் உள்ளனர். இவர்களில் 90 பேரை போயிங் ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...