அயோத்தியா மண்டப விவகாரம்: சமூக ஆா்வலருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப விவகாரத்தில் முறைகேடு குறித்து புகாா் அளித்த சமூக ஆா்வலருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப விவகாரத்தில் முறைகேடு குறித்து புகாா் அளித்த சமூக ஆா்வலருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் ஸ்ரீராம் சமாஜம் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்தியா மண்டபம் இயங்கி வந்தது. இந்த நிலையில், ஸ்ரீராம் சமாஜம் அமைப்பில் நிதி முறைகேடு நடப்பதாக அந்த அமைப்பின் ஆயுட்கால உறுப்பினரும், சமூக ஆா்வலருமான ரமணி (68) அரசிடம் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையிலேயே, இந்து அறநிலையத்துறை அண்மையில் அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தியது. அப்போது, பாஜக, இந்து இயக்கத்தினா் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, இது தொடா்பாக ஸ்ரீராம் சமாஜம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் ரமணி, தனக்கு கொலைக்கு மிரட்டல் வருவதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து ரமணிக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டது. ரமணிக்கு 24 மணி நேரமும் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...