

அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நாட்டில் வன்முறையைத் தூண்டும் இயக்கம் எதுவாக இருந்தாலும் தடை செய்யப்பட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றுள்ள சரத் பவார், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், ராம நவமியின்போது எந்தவித மதக் கலவரமும் ஏற்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. ஆனால் தற்போது மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜகவும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும்தான் காரணம். தில்லியில் சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் கட்டுக்குள் சென்றுவிட்டது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டில் வன்முறையை ஏற்படுத்துவது, அமைதியை சீர்குலைப்பது எந்தவித இயக்கமாக இருந்தாலும் அதனை மாநில மற்றும் மத்திய அரசு தடை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.