
கண்டோன்மென்ட் பகுதிகளிலும், ராணுவ மருத்துவமனைகளிலும் ஆயுர்வேத மையங்களை தொடங்க பாதுகாப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி 37 கண்டோன்மென்ட் பகுதியிலும், 12 ராணுவ
மருத்துவமனைகளிலும் ஆயுர்வேத மையங்கள் தொடக்கப்பட உள்ளன.
கண்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்களின்
குடும்பங்கள், இந்த மருத்துவமனையை சார்ந்திருக்கும்
பொதுமக்கள் ஆகியோருக்கு ஆயுர்வேத மையங்கள் பயனுடையதாக
இருக்கும். இவை நாடுமுழுவதும் 2022 மே 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
குஜராத் மாநிலம் காந்தி நகரின் மகாத்மா மந்திரில் 2022 ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின்போது ஆயுஷ் அமைச்சகத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்த ஒப்பந்தங்களில் ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர்
பிரமோத் குமார் பதக், ராணுவ மருத்துவமனைகளின் கூடுதல்
தலைமை இயக்குநர் சோனம் யாங்தோல் ஆகியோர்
கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.