இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஆந்திரம்: மின்சார பைக் பேட்டரி வெடித்து ஒருவர் பலி

ஆந்திரத்தில் மின்சார பைக் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது வெடித்ததில் ஒருவர் பலியானார். 

Published On :

ஆந்திரத்தில் மின்சார பைக் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது வெடித்ததில் ஒருவர் பலியானார். 

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள குலாபிபேட்டையில் சிவகுமார் நேற்றிரவு தனது படுக்கை அறையில் மின்சார பைக் பேட்டரிக்கு மின்இணைப்பு கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் மின்சார பைக்கின் பேட்டரி திடீரென வெடித்தது. இதில் அனைவரும் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டனர். 

இந்த சம்பவத்தில்  படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார்.

மேலும் படுகாயமுற்ற மனைவி ஆர்த்தி(30), பிந்துஸ்ரீ(10), சசி(6) மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். முன்னதாக கடந்த 19ஆம் தேதி தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில், வீட்டிற்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த மின்சார பைக்கின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 80 வயது முதியவர் பலியானார்.

காப்பாற்ற முயன்ற அவரது மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.