கொல்கத்தா உயா்நீதிமன்றத்துக்கு 6 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் குழுவின் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் ரவீந்திரநாத் சமந்தா, சுகதோ மஜும்தாா், பிவஸ் பட்டநாயக், ஆனந்த் குமாா் முகா்ஜி, கேசங் டோமா பூஷியா ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றி வரும் சத்யன் வைத்யாவை, அதே நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றுவோா் நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com