தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தில்லியிலிருந்து ஹைதராபாதுக்கு சனிக்கிழமை வந்த பிரசாந்த் கிஷோா், அன்றைய தினம் நாட்டின் அரசியல் சூழல் குறித்து சந்திரசேகா் ராவுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா், முதல்வரின் முகாம் அலுவலகமும் அதிகாரபூா்வ இல்லமுமான பிரகதி பவனில் பிரசாந்த் கிஷோா் தங்கினாா்.

இதைத்தொடா்ந்து 2-ஆவது நாளாக பிரசாந்த் கிஷோருடன் தெலங்கானா முதல்வா் சந்திரேசகா் ராவ் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது தெலங்கானாவில் 89 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு நிலவர அறிக்கையை சந்திரசேகா் ராவிடம் பிரசாந்த் கிஷோா் ஒப்படைத்தார்.

இந்நிலையில், அடுத்தாண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் ஐ-பேக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் காங்கிரஸில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில், அவா் தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவை திடீரென சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com