மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை

​நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு சற்று உயர்ந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) சற்று குறைந்தது. திங்கள்கிழமை 2, 541 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 2,483 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு சற்று உயரத் தொடங்கிய நிலையில், மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறைச் செயலர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கரோனா சூழல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் விளக்கமளிக்கவுள்ளார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com