கேதார்நாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் முதல்வர் தாமி

கேதார்நாத் யாத்திரை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கேதார்நாத்துக்கு வருகை புரிந்தார். 
கேதார்நாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் முதல்வர் தாமி
Published on
Updated on
1 min read

கேதார்நாத் யாத்திரை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கேதார்நாத்துக்கு வருகை புரிந்தார். 

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், கேதார்நாத் யாத்திரை தொடர்ச்சியாக மூன்று கட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் அடுத்த கட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி, 

கேதார்நாத் யாத்திரையை சுமுகமாக நடத்தவும், செயல்படவும் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புனித யாத்திரையை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஏற்பாடுகளை நானே பரிசீலனை செய்ய உள்ளேன். 

இந்தாண்டு உணவகங்கள், டாக்சிகள் போன்றவை 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுகின்றன. எனவே, இந்தமுறை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்காலத்தில் உத்தரகண்ட் மற்றும் தில்லி இடையேயான தூரம் 2 மணி நேரமாக குறைக்கப்படும். ஹரித்வாரில் இருந்து காஷிபூருக்கு இடையிலான துரம் ஒன்று முதல் 1.30 மணி நேரத்திற்குள் கடக்கப்படும். இதற்கான சாலை அமைப்பதற்கான முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயில் அறிவிப்பின்படி, கேதார்நாத் கோயில் நடை மே 6-ஆம் தேதியும், பத்ரிநாத் கோயில் நடை மே 8ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நடை திறப்பதற்கு முன், மே 2ஆம் தேதி உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலில் இருந்து கேதார் பாபாவின் டோலி (பல்லக்கு) கேதார்நாத்திற்கு புறப்படும். 

இந்தாண்டு மே 3ஆம் தேதி மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோயிலின் நடை திறக்கப்படுவதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்குகிறது 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com