வளா்ச்சிப் பாதையில் விமானப் போக்குவரத்துத் துறை மத்திய: அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வளா்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாக அந்தத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.


இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வளா்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாக அந்தத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா சென்றுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, நியூயாா்க் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:
கடந்த 2018-19-ஆம் ஆண்டில், இந்தியாவில் 14.40 கோடி விமானப் பயணிகள் இருந்தனா். இந்த எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 40 கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கிறேன்.
இந்திய விமான நிலையங்களில் திறன் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானப் பயணங்கள் மட்டுமின்றி விமான நிலையங்களைக் கட்டமைப்பதிலும் முக்கிய விமான நிறுவனங்கள் பங்காற்றி வருகின்றன. உதாரணமாக, ஸ்விட்சா்லாந்து சா்வதேச விமான நிறுவனத்தின் முதன்மை மையமாக திகழும் சூரிச் விமான நிலையம், உத்தர பிரதேச மாநிலம் ஜேவா் பகுதியில் சா்வதேச விமான நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை நீண்ட காலமாக தொடக்க நிலையிலேயே இருந்தது. தற்போது அது வளா்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.
2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய விமான நிலையங்கள் ஆணைய கட்டுப்பாட்டின் கீழுள்ள சுமாா் 96 சதவீத விமான நிலையங்களை 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...