கேரளத்தில் கனமழை: மக்கள் விழிப்புடன் இருக்க முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தல்
கேரளத்தில் கனமழை பெய்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பல ஓடைகளும் நிரம்பி வழிகின்றன.
மேலும பொன்முடி, கல்லாறு, மங்கயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- மேற்கு வங்கம்: மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலி
இதனிடையே அடுத்த 5 நாள்களுக்கு மாநிலத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.