ஏர் இந்தியா விமானிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!

ஏர் இந்தியா விமானிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவில் பணிபுரியும் விமானிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம்  வெளியிட்டுள்ளது. 

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவில் பணிபுரியும் விமானிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தொழில்துறையில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள், விமானிகள் பணிபுரியும் வயது 65 வரை அனுமதிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி ஏர் இந்தியா தனது எதிர்கால விரிவாக்கத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு விமானிகளை 65 வயது வரை பணிபுரிய அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜூலை 29 தேதி வெளியிட்ட அறிக்கையில், 

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிகபட்ச வயதான 65 வயது வரை விமானிகள் பணிபுரிய அனுமதித்துள்ளது. இதற்கு முன்னதாக ஏர் இந்தியாவில் ஓய்வு பெறும் வயது 58  ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய, தற்போதைய பயிற்சி பெற்ற விமானிகளை ஓய்வுக்குப் பிறகு, ஒப்பந்த அடிப்படையில் 65 வயது வரை நீட்டிக்க புதிய ஒப்பந்தம் போடப்படும் என்றும், அந்த ஒப்பந்தம் குறைந்தது 5 ஆண்டுகள் அவர்கள் பணியில் நீட்டிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் செயல்படுத்துவதற்கு முன்பு ஓய்வுபெறும் விமானிகளின் தகுதியை ஆய்வு செய்ய மனிதவளத்துறை, செயல்பாட்டுத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். ஒழுக்கம், விமானப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக விமானிகளின் கடந்தகால பதிவுகளை மதிப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் விமானிகள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. 

58 வயதில் ஓய்வு பெற்ற பின்னர் 5 ஆண்டுகள் முதல்கட்ட பணி நீட்டிப்பு ஒப்பந்தம் செய்யப்படும். அதில் திருப்திகரமான சேவை இருந்தால், அவர்களின் விருப்பத்தின் பேரில் ஒப்பந்தம் 65 வயது வரை நீட்டிக்கப்படும் என்று ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com