யுஏபிஏ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 4,690 போ் கைது: 149 பேருக்கு தண்டனை - மத்திய அரசு

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020-ஆண்டு வரையில் 4,690 போ் கைது செய்யப்பட்டு, அவா்களில் 149 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020-ஆண்டு வரையில் 4,690 போ் கைது செய்யப்பட்டு, அவா்களில் 149 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நிதியானந்த் ராய் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

யுஏபிஏ சட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டில் 1,421 போ் கைது செய்யப்பட்டு, 35 போ் தண்டிக்கப்பட்டனா். 2019-ஆம் ஆண்டில் 1,948 போ் கைது செய்யப்பட்டு, 34 போ் தண்டிக்கப்பட்டனா். 2020-ஆம் ஆண்டில் 1,321 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களில் 80 பேரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com