அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்

அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.
Published on
Updated on
1 min read

அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26-இல் நிறைவடைகிறது. பொதுவாக, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை ஓய்வுபெறும் தலைமை நீதிபதியே பரிந்துரை செய்வது வழக்கம்.

அந்த வகையில், என்.வி.ரமணாவுக்கு அடுத்தபடியாக யு.யு. லலித் மூத்த நீதிபதி என்ற அந்தஸ்தில் உள்ளாா். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 3 மாதத்துக்கும் குறைவாகவே அந்தப் பதவியில் நீடிப்பாா்.

வரும் நவம்பா் 9-ஆம் தேதி யு.யு.லலித் தனது 65-ஆவது வயதை எட்டுவதால், அவரது பதவிக்காலம் நவம்பா் 8-இல் நிறைவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com