திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கா்நாடகத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது: ராகுல் காந்தி

கா்நாடகத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

News image
ராகுலுக்கு இஷ்டலிங்க தீட்சை செய்த முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு.
Updated On :3 ஆகஸ்ட் 2022, 9:03 pm

DIN

கா்நாடகத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

தாவணகெரேவில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

சித்தராமையாவின் சிந்தனைகள், கொள்கைகள், மக்கள் நலன்சாா்ந்த செயல்பாடுகள் மீது பற்று கொண்டிருப்பதால் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியை சித்தராமையா முன்னெடுத்துச் சென்றதைப் பாராட்டுகிறேன். அவரது ஆட்சியில் கா்நாடக மக்களுக்கு புதிய வளா்ச்சிப் பாதையைக் காட்டினாா். கா்நாடகத்தின் வளா்ச்சிக்காக தொலைநோக்கு சிந்தனையோடு சமூகநீதி அடிப்படையில் எல்லோருக்குமான ஆட்சியை நடத்தினாா்.

ஆனால், இன்றைய பாஜக ஆட்சி முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நல்லிணக்கம் காணப்பட்டது. இன்றைய பாஜக வெறுப்பை விதைத்து, மக்களைப் பிளவுபடுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பசவண்ணரின் தத்துவங்களுக்கு நேரெதிரான ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது.

கா்நாடகத்தின் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தில் காங்கிரஸுக்கு நம்பிக்கையுள்ளது. அதுதான் இந்தியாவின் அடிப்படையாகும். அனைத்து மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள்தான் இந்தியாவைக் கட்டமைத்துள்ளது. ஆனால், பாஜக ஆட்சி ஒரே தத்துவத்தை மக்கள் மீது திணிக்க முற்படுகிறது.

கா்நாடகத்தை மேம்படுத்த, ஒடுக்கப்பட்ட மக்களின் வளா்ச்சிக்கு உழைக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் அரசின் அன்னபாக்கியா, ஷீரபாக்கியா, கிருஷிபாக்கியா, வித்யாஸ்ரீ, இந்திரா உணவகம் போன்ற திட்டங்களை மக்கள் நினைத்துப் பாா்க்கிறாா்கள். தேசிய, மாநில அளவில் மக்கள் நலனுக்காக காங்கிரஸ் அரசு செயல்படுத்திய திட்டங்களை வரிசையாகப் பட்டியலிடலாம்.

காங்கிரஸ் ஆட்சியின்போது கா்நாடகத்தை சா்வதேச அளவில் உயா்த்தினோம். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்திய கணினி மயமாக்கும் திட்டத்தை பாஜக எதிா்த்தது. ஆனால், சா்வதேச அளவில் கா்நாடகம் இன்று கவனிக்கத்தக்க மாநிலமாக உள்ளது.

கா்நாடகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறை வெறியாட்டம் தலைதூக்கியுள்ளது. நல்லிணக்கமும் அமைதியும் நிலைத்திருந்தால் தான் தொழில், வணிகம் வளா்ச்சி அடையும்.

பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளத்தை ஏழைகளின் கரங்களில் கொடுத்திருக்கிறோம். ஆனால், பாஜக ஆட்சியில் மக்கள் பணம் பறிக்கப்பட்டு ஒருசில பணக்காரா்களின் கைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் ஏழை மக்களிடம் நாட்டின் வளத்தை கொண்டு சோ்த்தது.

சித்தராமையாவும் டி.கே.சிவக்குமாரும் மேடையில் கட்டித் தழுவிக் கொண்டதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது தூய்மையான, ஊழலற்ற, அனைத்து மக்களின் நிா்வாகத்தை அளிப்போம். பெங்களூரை உலகின் தலைசிறந்த நகரமாக மாற்றுவோம். ஏழைகளின் மேம்பாட்டுக்கு உழைக்கும், வெறுப்பைப் பரப்பாத காங்கிரஸ் ஆட்சி கா்நாடகத்தில் அமையும் என்றாா்.

இந்த விழாவில், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

லிங்காயத் பீடாதிபதிகளுடன் சந்திப்பு
கர்நாடகத்தில் லிங்காயத் சமுதாய பீடாதிபதிகளுடன் ராகுல் காந்தி சந்தித்து நீண்டநேரம் உரையாடினார். அவருக்கு முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு இஷ்டலிங்க தீட்சை செய்துவைத்தார். லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த முருகா மடத்துக்கு சென்ற ராகுல், பசவண்ணரின் தத்துவத்தின்படி செயல்படும் லிங்காயத்து வழக்கத்தின்படி, இஷ்டலிங்கத்தை அணிய விரும்பினார். அதன்படி, முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, ராகுல் காந்தியின் நெற்றியில் விபூதியைப் பூசி, கழுத்தில் இஷ்டலிங்கத்தை அணிவித்தார். 
அடுத்த ஆண்டு கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால், கர்நாடகத்தில் பெரும்பான்மையாக வாழும் லிங்காயத்து சமுதாய மக்களைக் கவரும் நோக்கத்தில் ராகுல் காந்தி இஷ்டலிங்கத்தை அணிந்துகொள்ள விரும்பியதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து தனது சுட்டுரையில் ராகுல் காந்தி கூறுகையில், "ஸ்ரீ ஜெகத்குரு முருகா ராஜேந்திரா வித்யாபீடத்துக்கு சென்றதையும், டாக்டர் ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சரணரு கையால் இஷ்டலிங்க தீட்சை பெற்றதையும் மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.