மின்சார திருத்த சட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நிலை என்ன? டி.ஆர்.பாலு

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. டி.ஆர். பாலு
திமுக எம்.பி. டி.ஆர். பாலு

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து திமுகவின் டி.ஆர்.பாலு பேசியதாவது:

“35 ஆண்டுகளுக்கு முன்னதாக, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 14.3 ஹெக்டார் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றது. விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த புதிய சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், இந்த விவசாயிகளின் நிலை என்னவாகும் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம், அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதா கூறுகிறது. மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com